SBTV
இன்று நாடு முழுக்க நீட் தேர்வு.. கடுமையான ரூல்ஸ்.. இதை எல்லாம் மறக்காதீங்க மாணவர்களே!
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் நீட் தேர்வுக்கான மையங்கள் உள்ளது. நாடு முழுக்க 15 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதுகிறார்கள். 1 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்கள் இந்தாண்டு தமிழகத்தில் நீட் தேர்வு எழுதுகிறார்கள்.
இந்த தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் பின் வரும் விதிகளை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி,
- தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் எலக்ட்ரானிக் சாதனம் எதையும் எடுத்து செல்ல கூடாது.
- அணிகலன்கள், உணவுப் பொருட்கள் எடுத்து செல்ல கூடாது.
- எழுது பொருட்களை எடுத்து வரக்கூடாது. தேர்வு எழுத தேவையான பேனா தேர்வறையில் அளிக்கப்படும்.
- பெண்கள், ஆண்கள் யாராக இருந்தாலும் முழுக்கை உடை அணிய கூடாது.
- ஷூ அணிந்து வரக்கூடாது.
- முகத்தை மூடும் படி உடைகளை உடுத்த கூடாது.
- தண்ணீர் கேன் கொண்டு செல்ல கூடாது.
- தமிழ் கேள்வித்தாளில் தவறு இருந்தால் ஆங்கில கேள்வித்தாளை படித்து புரிந்து கொள்ள வேண்டும், என்று நிறைய விதிகள் விதிக்கப்பட்டு இருக்கிறது.